நாமக்கல்: ஊட்டச்சத்து உறுதி செய் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கிய எம்.பி இராஜேஸ்குமார்.
Namakkal (Off) King 24x7 |15 Nov 2024 4:25 PM GMT
நாமக்கல் மாவட்டத்தில் 3,812 குழந்தைகளுக்கு "ஊட்டச்சத்தை உறுதி செய்" திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது. பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/ நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தகவல்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அரியலூர் மாவட்டம், வாரணவாசி குழந்தைகள் மையத்தில், தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகளை களையும் நோக்குடன் செயல்படுத்தப்பட்டு வரும் முன்னோடி திட்டமான "ஊட்டச்சத்தை உறுதி செய்" திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கி வைத்து, தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். அதனைத்தொடர்ந்து, நாமக்கல் மாநகராட்சி, மலையாண்டி தெரு குழந்தைகள் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, மேயர் து.கலாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர். இத்திட்டத்தின் மூலம் தீவிர ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக கண்டறியப்பட்ட குழந்தைகளில் சுமார் 77.3% குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர் என்று குறிப்பிடத்தக்கது. பிறந்தது முதல் ஆறு மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே உணவாக வழங்கப்பட வேண்டும். ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் தாய்மார்களின் உடல்நலம் பேணினால் மட்டுமே, குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்த முடியும். எனவேதான், தற்போது 76,705 ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள 0-6 மாத குழந்தைகளின் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை அவர்களின் வீட்டிற்கே சென்று வழங்குவதோடு மட்டுமல்லாமல், குழந்தைகளின் நிலையை தொடர்ந்து கண்காணிக்கும் "ஊட்டச்சத்தை உறுதி செய்" திட்டத்தின் இரண்டாம் கட்டம் 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்படும்.இந்நிகழ்ச்சியில் துணை மேயர் செ.பூபதி, முதன்மை கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி, திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம்) சசிகலா, மாவட்ட சமூக நல அலுவலர் தி.காயத்திரி உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story