குடியிருப்பில் மாடியின் கைப்பிடி சுவர் திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு
Thoothukudi King 24x7 |16 Nov 2024 8:50 AM GMT
தூத்துக்குடியில் அனல்மின் நிலைய ஊழியர் குடியிருப்பில் மாடியின் கைப்பிடி சுவர் திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி தெர்மல்நகர் அனல்மின் நிலைய ஊழியர் குடியிருப்பில் கேம்ப்-2, டைப்-1, 23வது பிளாக்கில் இன்று மொட்டை மாடிக்கு செல்லும் படிக்கட்டு கை பிடி சுவர் இடிந்து கீழே விழுந்தது. இந்த சம்பவத்தில் குடியிருப்பு வாசிகள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. கட்டிடத்தின் கீழ் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு வாகனங்கள் மட்டும் சேதம் ஆகியுள்ளது. தூத்துக்குடியில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ஆபத்தான நிலையில் உள்ள இந்த கட்டிடத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என் அங்கு வசித்து வரும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story