நாமக்கல்: கபிலர்மலை அருகே மினி சரக்கு வாகனம் மீது லாரி மோதி விபத்து.

நாமக்கல்: கபிலர்மலை  அருகே மினி சரக்கு வாகனம் மீது லாரி மோதி விபத்து.
நாமக்கல்லில் கபிலர்மலை அருகில் மினி சரக்கு வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த இருவர் உட்பட 3 பேர் உயிரிழப்பு.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த சிறுகிணத்து பாளையம் சேர்ந்தவர் கந்தசாமி, இவர் திருமணத்திற்கான டெக்கரேஷன் தொழில் செய்து வருகின்றார். இந்த நிலையில் ஈரோடு அடுத்த சோழங்கபாளையத்தில் நிகழ்ச்சி ஒன்றுக்கு டெக்கரேஷன் பணிகளை செய்து விட்டு மினி சரக்கு லாரியில் சுமார் 5 பேர் நள்ளிரவு ஊர் திரும்பி வந்து கொண்டிருந்தனர் ஜேடர்பாளையம் - கபிலர்மலை சாலையில் தண்ணீர்பந்தல் பாளையம் அருகே மினி சரக்கு வாகனம் வந்த போது எதிரே வந்த சரக்கு லாரி மோதியதில் மினி சரக்கு வாகனத்தில் பயணம் செய்த சிறுகிணத்துபாளையத்தை சேர்ந்த சக்திநாதன்-18 சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கருக்கம்பாளையத்தை சேர்ந்த சிவா (18), பூமிஸ் (19) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். மீதமுள்ள இருவர் லேசான காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜேடர்பாளையம் போலீசார் காயமடைந்த சிவா, பூமிஸ் ஆகிய இருவரையும் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சிவா, பூமிஸ் ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர் பந்தலில் மினி சரக்கு வாகனம் மீது சரக்கு லாரி மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அந்த கிராம பொது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story