கரூர்- கார்த்திகை முதல் நாள் ஐயப்பன் ஆலயத்தில் மாலை அணிந்த பக்தர்கள்.
Karur King 24x7 |16 Nov 2024 10:58 AM GMT
கரூர்- கார்த்திகை முதல் நாள் ஐயப்பன் ஆலயத்தில் மாலை அணிந்த பக்தர்கள்.
கரூர்- கார்த்திகை முதல் நாள் ஐயப்பன் ஆலயத்தில் மாலை அணிந்த பக்தர்கள். கார்த்திகை 1ம் தேதியான இன்று பல்வேறு ஐயப்பன் ஆலயங்களில் பக்தர்கள் 48 நாள் விரதம் இருக்க இன்று முதல் மாலை அணிந்து, தங்களது முதல் நாள் விரதத்தை தொடங்கியுள்ளனர். இதே போல கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பசுபதீஸ்வரர் ஆலயம் அருகே உள்ள ஐயப்பன் ஆலயத்தில் சிறுவர்கள், பெரி ** யவர்கள், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் இன்று ஐயப்ப சன்னிதியில் சரண கோஷம் முழங்க மாலை அணிந்து கொண்டனர். குருசாமி மாலை அணிவிக்க அதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் மாலை அணிவித்து தொடர்ச்சியாக சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் இன்று முதல் ஐயப்பன் ஆலயத்தில் நாள்தோறும் அதிகாலை சிறப்பு அபிஷேகமும் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது 48 நாள் விரதம் இருக்கும் கன்னி சாமிகள் குறிப்பாக இன்று முதல் தங்களது விரதத்தை தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதே போல் காந்திகிராமம் உள்ளிட்ட பல்வேறு ஐயப்பன் ஆலயங்களில் அதிகாலை முதலே பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர்.
Next Story