ஸ்ரீ மகா முத்து மாரியம்மனுக்கு அன்ன அபிஷேகம்..

ஸ்ரீ மகா முத்து மாரியம்மனுக்கு அன்ன அபிஷேகம்..
ஸ்ரீ மகா முத்து மாரியம்மனுக்கு அன்ன அபிஷேகம்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சிவானந்தா சாலை கிழக்குத் தெரு பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் திருக்கோவிலில் பௌர்ணமி பூஜையை தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகமும் தொடர்ந்து அன்னாபிஷேக அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இப்பதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story