மருத்துவமனையில் புதிய கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர்

மருத்துவமனையில் புதிய கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர்
மருத்துவமனையில் புதிய கட்டிடம் திறப்பு
நெல்லை அரசு மருத்துவமனையில் ரூ.1.75 கோடி மதிப்பில் புதிய மருத்துவ கட்டிடங்கள் மற்றும் மருத்துவ பிரிவுகள் திறந்து வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கார்த்திகேயன், ராபர்ட் புரூஸ் எம்பி, பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வஹாப், மருத்துவமனை டீன் ரேவதி பாலன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story