உர கழிவு கட்டடம் கட்டுவதற்கு எதிர்ப்பு
Thirukoilure King 24x7 |17 Nov 2024 6:52 AM GMT
எதிர்ப்பு
திருக்கோவிலுார், அம்பேத்கர் நகர் பகுதியில் நகராட்சி சார்பில் உரக்கழிவு கட்டடம் கட்டுவதை கைவிடக் கோரி நகராட்சி கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டது. திருக்கோவிலுார், சந்தைப்பேட்டை, அம்பேத்கர் நகர் பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில், திடக்கழிவு மேலாண்மை செயல்திட்டத்தில், உரக்கழிவு கட்டடம் கட்டுவதற்கு நகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.குடியிருப்புகள் மிகுந்த இப்பகுதியில் உரக்கழிவு திட்டம் செயல்படுத்தப்பட்டால், துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதியில் குடியிருப்போருக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால், இத்திட்டத்தை கைவிடுமாறு அம்பேத்கர் நகர் பகுதி மக்கள் சார்பில் அ.தி.மு.க., நகர செயலாளர் சுப்பு மற்றும் மா.கம்யூ., சார்பில் கோரிக்கை மனுவை திருக்கோவிலுார் நகராட்சி கமிஷனர் திவ்யாவிடம் வழங்கினர்.
Next Story