தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர் துண்டு பிரசுரம் வழங்கினர்

X
Pallipalayam King 24x7 |17 Nov 2024 5:06 PM ISTவாக்காளர் சிறப்பு முகாம் குறித்த துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது
,நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக்கழகம் சார்பில் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி பள்ளிபாளையம் நால்ரோடு பகுதியில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்த்தல், பெயர் திருத்தம் உள்ளிட்ட சேவைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்று வரும் நிலையில், இதனை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாகவும், பொதுமக்கள் அனைவரும் இந்த வாக்காளர் சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியும், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.....
Next Story
