விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவிப்பு

X
Pallipalayam King 24x7 |17 Nov 2024 5:29 PM ISTகரேத்தா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்
பள்ளிபாளையம் அடுத்துள்ள சின்னார் பாளையம் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் நற்பணி மன்றத்தின் சார்பாக, பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதியில் சிலம்பம் மற்றும் கராத்தே போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர்களையும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர் அவர்களையும் கௌரவிக்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வெப்படை காவல் நிலைய க்ரைம் பிரிவு அதிகாரி பிரவீன் சார் , வெப்படை மோரங்காடு முருகேஷ் அவர்களும், ஈக்காட்டூர் பேங்க் சுப்பிரமணி அவர்களும், வெப்படை வேலவன் எலக்ட்ரிகல்ஸ் உரிமையாளர் கார்த்தி , கால்நடை மருத்துவர் தமிழ் , கராத்தே மாஸ்டர் சீனிவாசன், சிலம்பு மாஸ்டர் சுரேஷ் மற்றும் ஜெகதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
