உடுமலையில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சிகள் மாணவ மாணவிகள் அசத்தல்
Udumalaipettai King 24x7 |17 Nov 2024 12:53 PM GMT
500க்கும் மேற்பட்ட படைப்புகள் செய்தனர்
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள சாந்தி பள்ளியில் (ஐசிஎஸ்இ) அறிவியல் கண்காட்சி நடைபெற்றது அறிவியல் கண்காட்சியில் 500க்கும் மேற்பட்ட படைப்புகள் செய்து மாணவ மாணவிகள் அசத்தினர் .குறிப்பாக பனிப்பிரதேசம் எவ்வாறு இருக்கும் அங்கு மக்களின் வாழ்க்கை முறை மற்றும் வாழும் உயிரினங்கள் தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டிருந்தது மேலும் பாலைவனம் எவ்வாறு இருக்கும் பாலைவனத்தில் வாழும் உயிரினங்கள் குறித்தும் , ஆழ்கடலில் உள்ள உயிரினங்கள் வாழும் முறையும் தத்துரூபமாக மாணவர்கள் செய்து காட்டி அசத்துகின்றனர் மற்றும் மாணவர்கள் தயாரித்த கூட்டு நூண்ணோக்கி , மனித உடலில் உறுப்புகள் செயல்படும் முறை மற்றும் இதயத்துடிப்பு எவ்வாறு இருக்கும் மற்றும் செம்மண் கலந்த நீரை நல்ல தண்ணீராக மாற்றும் இயந்திரம், காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிப்பது எவ்வாறு , மழை நீர் வீட்டின் மேல் விழுந்தால் அலாரம் அடிக்கும் இயந்திரம், மக்கும் மக்காத குப்பைகளை கொண்டு மின்சாரம் தயாரிப்பது மற்றும் நூற் பாலைக்கு தேவையான இன்ங் தயாரிக்கும் இயந்திரம் மற்றும் சிறு குழந்தைகள் உருவாக்கிய சூரிய குடும்பம் மற்றும் வானத்தில் நிலாவின் செயல்பாடு உட்பட பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகள் தத்துவருமாக செய்து காண்பிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது .மற்றும் அறிவியல் கண்காட்சியில் வேதியியல் இயற்பியல் விலங்கியல் துறைகள் நோபல் பரிசு பெற்ற தலைவர்கள் புகைப்படம் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்
Next Story