குட்டிக்காரன் புதூரில் மதுவால் வந்த வினை. மனைவி பிரிந்து சென்றதால் கணவன் தூக்கிட்டு தற்கொலை.
Karur King 24x7 |17 Nov 2024 1:53 PM GMT
குட்டிக்காரன் புதூரில் மதுவால் வந்த வினை. மனைவி பிரிந்து சென்றதால் கணவன் தூக்கிட்டு தற்கொலை.
குட்டிக்காரன் புதூரில் மதுவால் வந்த வினை. மனைவி பிரிந்து சென்றதால் கணவன் தூக்கிட்டு தற்கொலை. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, சேங்கல், குட்டிக்காரன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் வயது 41. விவசாயி. இவரது மனைவி நந்தினி வயது 33. இவர்கள் இருவருக்கும் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அண்மைகாலமாக சக்திவேல் மது போதைக்கு அடிமையாகி இருந்தார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் இருவரும் தனித்தனியாக வசித்து வந்தனர். இதனால் விரத்தி அடைந்த மனநிலையுடன் வாழ்ந்து வந்த சக்திவேல்,நவம்பர் 15ம் தேதி இரவு 7:30 மணி அளவில் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச் சம்பவம் அறிந்த நந்தினி அதிர்ச்சி அடைந்தார். மேலும், இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், உயிரிழந்த சக்திவேலின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மாயனூர் காவல்துறையினர்.
Next Story