முத்துலாடம்பட்டியில் மயங்கி விழுந்த கூலித் தொழிலாளி உயிரிழப்பு.மனைவி புகார்.
Karur King 24x7 |17 Nov 2024 2:25 PM GMT
முத்துலாடம்பட்டியில் மயங்கி விழுந்த கூலித் தொழிலாளி உயிரிழப்பு.மனைவி புகார்.
முத்துலாடம்பட்டியில் மயங்கி விழுந்த கூலித் தொழிலாளி உயிரிழப்பு.மனைவி புகார். கரூர் மாவட்டம், தாந்தோனிமலை முத்துலாடம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் வயது 40. இவரது மனைவி காளியம்மாள் வயது 38. மாரியப்பன் அப்பகுதியில் உள்ள லோகு என்கிற பழனிசாமி தோட்டத்தில் கூலிவேலை செய்து வந்தார். இந்நிலையில் நவம்பர் 15ஆம் தேதி மதியம் 1:30 மணி அளவில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த மாரியப்பன் மயங்கி கீழே விழுந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பழனிச்சாமி காளியம்மாளுக்கு மாரியப்பன் மயங்கி விழுந்தது குறித்து தகவல் அளித்துள்ளார். உடனடியாக காளியம்மாள், பழனிச்சாமி தோட்டத்திற்கு சென்று தனது கணவனை வீட்டுக்கு அழைத்து வந்ததோடு, 108 ஆம்புலன்ஸ்க்கும் அவசர உதவி கேட்டு தகவல் அனுப்பினார். விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மாரியப்பனை பரிசோதித்து, அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காளியம்மாள் காவல்துறையினருக்கு அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த மாரியப்பனின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தாந்தோணிமலை காவல்துறையினர்.
Next Story