நாமக்கல் ஜவகர் சிறுவர் மன்றத்தில் மாணவர்கள் புத்தகம் வாசிப்பு இயக்கம் தொடக்கம்!
Namakkal King 24x7 |17 Nov 2024 2:29 PM GMT
குழந்தைகளுக்கு சிறுவர் புத்தகங்களை வழங்கி வாசிக்க வைத்து நேரம் கிடைக்கும் போது நூல்களை படிக்கவும் நூலகங்களுக்கு செல்லும் பழக்கத்தை உருவாக்கி கொள்ள வேண்டும்!
புத்தகங்களை படிக்கும் பழக்கம் இருந்தால், சக மனிதர்களை நேசிக்கும் பழக்கம் தன்னாலே வரும். சிந்தனைகள் நிரம்பிய பெட்டகமாக இருக்கும் புத்தகங்கள் பலருக்கு, பலவிதமான சிந்தனைகளை தூண்டுகின்றன. அந்த சிந்தனைதான் ஒரு மனிதனை பல்வேறு இடங்களில் உயர்த்தி பிடிக்கின்றன.என்பதை வலியுறுத்தும் வகையில் நாமக்கல் மாவட்ட மைய நூலகம், மைய நூலக வாசகர் வட்டம் நாமக்கல் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் இணைந்து தேசிய நூலக வார விழாவை சிறப்பிக்கும் விதமாக சிறுவர்கள் நூல்களை வாசிக்கும் இயக்கம் துவங்கப்பட்டது. நாமக்கல் நகரவை கோட்டை உயர்நிலைப் பள்ளியில் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நுண்கலைகளை கற்றுக் கொடுக்கும் ஜவகர் சிறுவர் மன்றம் கலை பண்பாட்டு துறை மூலம் செயல் பட்டு வருகிறது, இதில் குழந்தைகளுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கும் விதமாக தேசிய நூலக வாரவிழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட மைய நூலகம், மைய நூலக வாசகர் வட்டம் சார்பாக குழந்தைகளுக்கு சிறுவர் புத்தகங்களை வழங்கி வாசிக்க வைத்து நேரம் கிடைக்கும் போது நூல்களை படிக்கவும் நூலகங்களுக்கு செல்லும் பழக்கத்தை உருவாக்கி கொள்ள வேண்டும் என மைய நூலக வாசகர் வட்ட தலைவர் மா.தில்லை சிவக்குமார் கேட்டுக் கொண்டார். மைய நூலக இரண்டாம் நிலை நூலகர் நாகராஜ் நூலகத்தில் ரூ 30 /- கட்டி உறுப்பினராக இணைந்தால் என்ன பயன்கள் என்பதை விளக்கினார்,மைய நூலக மூன்றாம் நிலை நூலகர் கோகிலா வாழ்த்துரை வழங்கினார்.ஜவகர் சிறுவர் மன்ற ஆசிரியர்கள் இராமச்சந்திரன்,பாண்டியராஜன், சரவணன், அசோகன் மற்றும் ஜவகர் சிறுவர் மன்ற மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களுக்கு பிடித்தமான புத்தங்களை தேர்வு செய்து வாசித்தனர்.
Next Story