வைகை அணையில் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

வைகை அணையில்  நீர்மட்டம்  குறைந்து வருகிறது.
வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தொடர்ந்து நீர் திறக்கப்படுவதால் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
வைகை அணைக்கு முல்லை பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு வைகை ஆறுகள் மூலம் நீர்வரத்து கிடைக்கிறது. அணையில் இருந்து ஜூலை 3 முதல் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பெரியாறு பிரதான கால்வாய் இருபோக பாசன நிலங்களுக்கும், செப்டம்பர் 15 முதல் திருமங்கலம் பிரதான கால்வாய் ஒருபோக பாசன நிலங்களுக்கும் தண்ணீர் திறக்கப்பட்டது.சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசன நிலங்களுக்காக நவம்பர் 10 முதல் வினாடிக்கு 3000 கனஅடி வீதம் ஆற்றின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் போதுமான மழை இல்லாததால் வரத்து குறைவாக உள்ளது. தொடர்ந்து நீர் வெளியேற்றப்படுவதால் நீர்மட்டம் வேகமாக குறைகிறது. நவம்பர் 10 ல் 64.96 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 59.97 அடியாக குறைந்துள்ளது. அணை உயரம் 71 அடி. கடந்த ஆறு நாட்களில் அணை நீர்மட்டம் 5 அடி குறைந்துள்ளது. நேற்று அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 1164 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 3303 கன அடி பாசனத்திற்கும், மதுரை, தேனி, ஆண்டிப்பட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.
Next Story