மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கைக் குழந்தையுடன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கைக் குழந்தையுடன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கைக் குழந்தையுடன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு. கரூர் மாவட்டம், புலியூர், வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்தவர் நந்தினி வயது 30. இவரது கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக இருவரும் தனித்தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் நவம்பர் 11ஆம் தேதி அவரது தந்தை மற்றும் சகோதரர் வீட்டுக்கு சென்றுள்ளார் நந்தினி. அப்போது, ஏற்கனவே சகோதரனிடம் கொடுத்த பணத்தை திரும்ப கொடுக்குமாறு கேட்டுள்ளார். ஆனால், பணம் கொடுக்க மறுத்ததோடு, தந்தை அவரது சகோதரர் மற்றும் நந்தினியின் சகோதரர்கள் நந்தினியை அடித்து துன்புறுத்தி உள்ளனர். இதனால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவரிடம் காவல்துறையினர் விளக்கம் கேட்டுள்ளனர். அப்போது தனக்கு நேர்ந்த துன்பம் குறித்து புகாராக அளித்துள்ளார் காவல்துறையினரிடம். ஆனால், ஐந்து நாட்கள் ஆகியும் தனது புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் வாராந்திர குறைதீர் கூட்டத்திற்கு தனது கை குழந்தையுடன் வந்த நந்தினி, மறைத்து எடுத்து வந்து மண்ணெண்ணெய் பாட்டிலை திறந்து தன் தலையிலும் குழந்தை மீதும் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதனை கவனித்த காவல்துறையினர் தடுத்தனர். தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனடியாக தண்ணீரை ஊற்றி தற்கொலை முயற்சியை தடுத்தனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் தெரிவித்த அவர், கடந்த 11ஆம் தேதி தந்தை வீட்டிற்கு சென்ற போது, தன்னை தாக்கி, அணிந்திருந்த நைட்டியை கிழித்து, நிர்வாணமாக்கி, அவமானப்படுத்தியதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர் குடும்பத் தகராறில் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இளம்பெண் கை குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்ள முயன்ற விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story