கரூரில் பேருந்துக்கு கூண்டு கட்டும் நிறுவனத்தில் ஆய்வு செய்ய விசிக ஆட்சியரிடம் மனு.

கரூரில் பேருந்துக்கு கூண்டு கட்டும் நிறுவனத்தில் ஆய்வு செய்ய விசிக ஆட்சியரிடம் மனு.
கரூரில் பேருந்துக்கு கூண்டு கட்டும் நிறுவனத்தில் ஆய்வு செய்ய விசிக ஆட்சியரிடம் மனு. கடந்த சில தினங்களுக்கு முன்பு கரூர் தாந்தோணிமலை பகுதியில் செயல்படும் தனியார் பஸ் பாடி காட்டும் நிறுவனத்தில் வெல்டிங் பிரிவில் பணியாற்றிய தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அப்போது அந்த நிறுவனத்தில் உயிர்காக்கும் கருவிகள் ஏதும் இல்லை என கூறப்பட்டது. இதன் காரணமாக இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் கராத்தே இளங்கோ தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் இனி இனி ஒரு தொழிலாளி உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்பு பேருந்துக்கு கூண்டு கட்டும் நிறுவனங்களில் ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர். இது தொடர்பாக கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அக்னி.இல. அகரமுத்து தெரிவிக்கும் போது, மாவட்ட ஆட்சியரிடம் தொழிலாளர்களை காக்கும் வண்ணம் அளித்த புகார் மனுவிற்கு, ஒரு வாரத்திற்கு உள்ளாக தொழிலாளர் நல ஆய்வாளர்கள் ஒவ்வொரு பேருந்து கூண்டு கட்டும் நிறுவனத்திலும் ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளதாக தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது கட்சியின் தாந்தோணி நகர செயலாளர் சக்திவேல், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தீபக்குமார், மாவட்ட துணை செயலாளர் தனபால் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Next Story