இந்து மக்கள் கட்சி இளைஞர் அணி மாநில தலைவரை விடுதலை செய்ய மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த கட்சியினர.
Karur King 24x7 |18 Nov 2024 10:45 AM GMT
இந்து மக்கள் கட்சி இளைஞர் அணி மாநில தலைவரை விடுதலை செய்ய மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த கட்சியினர. ழல
இந்து மக்கள் கட்சி இளைஞர் அணி மாநில தலைவரை விடுதலை செய்ய மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த கட்சியினர. இந்து மக்கள் கட்சியின் இளைஞர் அணி மாநில தலைவராக ஓம்கார் பாலாஜி செயல்பட்டு வருகிறார். இவர் கோவை மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவதூறாக பேசியதாக, காவல்துறை வழக்கு பதிவு செய்து, ஓம்கார் பாலாஜியை கோவை சிறையில் அடைத்துள்ளனர். அவரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்று இந்த அமைப்பின் கரூர் மாவட்ட தலைவர் காலனி மணி தலைமையில், மாவட்ட ஆட்சியர் வாராந்திர குறைதீர் கூட்டத்தில் அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும், அவர் மீது போடப்பட்ட வழக்கை தமிழக அரசும், காவல்துறையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர். இந்த நிகழ்ச்சியின் போது மாநில நிர்வாக குழு உறுப்பினர் சுரேஷ், மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி, இளைஞரணி மாவட்ட தலைவர் கார்த்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். மேலும், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர்.
Next Story