நாமக்கல்லில் தேசிய இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மனித சங்கிலி!
Namakkal King 24x7 |18 Nov 2024 1:29 PM GMT
அரவிந்த் மற்றும் பிஜிபி கல்லூரிகளில் இருந்து செவிலிய மாணவ/மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.
தேசிய இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது.இந்த நிகழ்வை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மருத்துவர் சாந்தா அருள்மொழி தலைமையில் நடைபெற்றது. இந்த மனித சங்கிலி உள்ளுறை மருத்துவ அலுவலர் மரு.குணசேகரன், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட செயலர் சி.ஆர்.ராஜேஷ் கண்ணன், ஸ்ரீ கோகுல்நாதா மிஷன் இயற்கை மற்றும் யோகா மருத்துவமனையின் இயக்குனர் மாதையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அரவிந்த் மற்றும் பிஜிபி கல்லூரிகளில் இருந்து செவிலிய மாணவ/மாணவிகள் என 200க்கும் மேற்பட்டோர் இந்த விழிப்புணர்வு பேரணியில் பங்கு பெற்றனர்.
Next Story