டூ வீலர் நேருக்கு நேர் மோதல் லிப்ட் கேட்டு சென்ற தொழிலாளி பரிதாப பலி

டூ வீலர் நேருக்கு நேர் மோதல் லிப்ட் கேட்டு சென்ற தொழிலாளி பரிதாப பலி
டூ வீலர் நேருக்கு நேர் மோதல் லிப்ட் கேட்டு சென்ற தொழிலாளி பரிதாப பலி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே டூ வீலர் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் லிப்ட் கேட்டு சென்ற தொழிலாளி பரிதாபமாக பலியானார். நாமகிரிப்பேட்டை அடுத்த வேலம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி மகன் செல்வம், 53, கூலித்தொழிலாளி. மதியம், 1 மணியளவில் ராசிபுரத்தில் இருந்து நாமகிரிப்பேட்டைக்கு செல்ல பஸ்சுக்கு காத்திருந்தார். அப்போது, ராசிபுரம் முள்ளுவாடி தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் குணசேகரன்,30 தனது ஆர். ஒன்பைவ் டூ வீலரில் நாமகிரிபேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். வழியில் நின்று கொண்டிருந்த செல்வம் கையை காட்டவே அவரை ஏற்றிக்கொண்டு வந்துள்ளார். ராசிபுரம் அடுத்த காக்காவேரி அருகே வரும்போது, முன்னாள் ேஹோண்டா டியோ ஸ்கூட்டரில் கேனேரிப்பட்டியை சேர்ந்த வேலுசாமி மனைவி மலர் என்கிற தேன்மொழி, 55 சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த குணசேரன் மலரை முந்த முயற்சித்துள்ளார். அப்போது வண்டி மீது மோதாமல் இருக்க குணசேகரன் பிரேக் பிடித்தாக கூறப்படுகிறது. இதில், பின்னால் உட்கார்ந்திருந்த செல்வம் தலைகுப்புற கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த செல்வம் சம்பவ இடத்திலேயே இறந்தார். ேஹாண்டா வண்டியில் சென்ற, மலைரை சிசிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். காயமடைந்த குணசேகரன் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story