விசாரணை மாணவனை தனது இருக்கையில் வைத்து அறிவுரை கூறிய இன்ஸ்பெக்டர்
Nagercoil King 24x7 |18 Nov 2024 2:43 PM GMT
சுசீந்திரத்தில்
குமரி மாவட்டம் சுசீந்திரம் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ஆதம் அலி நேற்று குடும்ப பிரச்சினை காரணமாக என் ஜி ஓ காலனியைச் சார்ந்த குடும்பத்தினர் விசாரணைக்காக சுசீந்திரம் காவல் நிலையத்திற்கு வந்திருந்தனர். அப்பொழுது அவருடைய குடும்ப பிரச்சனையை விசாரித்த ஆய்வாளரிடம் குடும்பத் தலைவி தனது மகன் சரியாக படிக்கவில்லை எனவும், நண்பர்களோடு வெளியே சுற்றுவதிலேயே கவனத்தை செலுத்தி வருகிறான் பள்ளிக்கு சென்று ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தவன்பள்ளிக்கு செல்ல மாட்டேன் என கூறி வருகிறான் எனவும் ஆய்வாளரிடம் கண்கலங்கி உள்ளார். உடனடியாக ஆய்வாளர் அந்த சிறுவனை அழைத்து நீ பிறருக்கு உதவும் வகையில் நல்ல படித்து என்னை விட உயர்ந்த பதவிக்கு வர வேண்டும் எனக் கூறி தனது இருக்கையில் அச்சிறுவனை அமரச் செய்து, இதுபோல உயர்ந்த பதவியில் நீ இருப்பதை உனது தாயாக பார்க்க வேண்டும் செய்வாயா என அந்த மாணவரிடம் கூறியுள்ளார். உடனடியாக அந்த மாணவனும் நான் நாளையிலிருந்து பள்ளிக்கு சென்று படிப்பேன் எனக் கூறியுள்ளார். ஆய்வாளரின் இதய செயல் பொதுமக்களிடம் வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதுபோல அரசு அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக செயல்பட்டு ஊக்குவிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். படிக்க மாட்டேன் என்ற சிறுவனை தனது இருக்கையில் அமர வைத்து அறிவுரை வழங்கியசுசீந்திரம் காவல் ஆய்வாளர் ஆதம் அலியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
Next Story