பரமத்தி வேலூர் நாட்டுக்கோழி வார சந்தையில் விலை உயர்வு.
Paramathi Velur King 24x7 |18 Nov 2024 3:09 PM GMT
பரமத்திவேலூர் வார சந்தையில் நாட்டுக்கோழி விலை உயர்வடைந்துள்ளதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பரமத்தி வேலூர்,நவ.18- பரமத்திவேலூரில் சுல்தான் பேட்டை பகுதியில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை நாட்டுக் கோழிசந்தை நடைபெறும். இந்த சந்தைக்கு பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராமங்களான சோழசிராமணி, ஜேடர் பாளையம், கபிலர்மலை, பிலிக்கல்பாளையம், - பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, குப்பிச்சி பாளையம், ஓலப்பாளையம், பாலப்பட்டி, நன்செய் இடையார் ஆகிய பகுதிகளில் இருந்து நாட்டுக்கோழி வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் வாரச்சந்தைக்கு நாட்டு கோழி மற்றும் சண்டை கோழி சேவல் உள்ளபல்வேறு ரகங்களான காகம், கருஞ்சதை, கிளிமூக்கு, கிரிராஜா, மயில், ஆகிய ரகங்களான கோழிகளை வாரச்சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்தனர். ஞாயிற்று க்கிழமை அசைவ பிரியர்கள், கோயில்களில் நேர்த்திக்கடன் செய்பவர்கள் எனநாட்டுக்கோழி சந்தைக்கு காலை முதலே ஏராளமான பொதுமக்கள் வந்து வாங்கி சென்றனர். கடந்த வாரம் கிலோ ஒன்று நாட்டுக்கோழி ரூ.300-க்கு விற்பனையானது. ஆனால் இந்த வாரம் ரூ.500 முதல் ரூ.600க்கு விற் பனையானது. இதே போல் சண்டை சேவல்கள் கடந்த வாரம் ரூ.1000 முதல் ரூ.4000க்கும் விற்பனையானது. இந்த வாரம், ரூ.3000 முதல் ரூ.6000 வரை விற்பனை யானதால் நாட்டுக்கோழி வளர்க்கும் விவசாயிகள், வியா பாரிகள், கடந்த வாரத்தை விட ஒரு கிலோவிற்கு இரு மடங்கு விலைக்கு விற்பனையானதால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வியாபாரிகள் கூறுகையில் இப்பகுதி கிராமம் சார்ந்த பகுதி என்ப தால்நாட்டுக் கோழிவளர்ப்போர் அதிக அளவில் உள்ளனர். நாட்டுக்கோழி சந்தையில் விற்பனைக்கு கோழிகள் குறைவாக கொண்டு வந்ததால் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மாமிச பிரியர்கள் பொதுமக்கள் அதிகாலையிலேயே வழக்கத்தைவிட அதிக அளவில் வந்து கோழி வாங்கி சென்றதால். எப்போதும் சந்தை அதிகாலை தொடங்கி காலை ஒன்பது பத்து மணிக்கு முடியும் ஆனால் இந்த வாரம் கோழிசந்தை காலை 8 மணிக்கு அனைத்து ரக நாட்டு கோழிகளும் விற்பனையாகி முன்கூட்டியே கோழி சந்தை முடிந்தது. இதனால் கோழிகள் கடந்த வாரத்தை விட இருமடங்கு விலைக்கு விற்பனையானதால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம் என்று கூறினார்கள்.
Next Story