பரமத்திவேலூர் சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் முகாம்.

X
Paramathi Velur King 24x7 |18 Nov 2024 8:45 PM ISTபரமத்திவேலூர் சட்டசபை தொகுதி முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் முகாம் நடைபெற்று வருகிறது.
பரமத்தி வேலூர், நவ.18: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரமத்திவேலூர், பொத்தனூர்,பாண்டமங்கலம், நெட்டையாம்பாளையம், வெங்கரை,கொந்தளம், 'பிலிக்கல்பாளையம், சாணார்பாளை யம், அய்யம்பாளையம் ஆனங்கூர், உள்ளிட்டபல்வேறு பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் நேற்று முன்தினமும்,நேற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்,பெயர் நீக்கல்,வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் பதிவு செய்தல்,வெளிநாடு வாழ்வாக்காளர் பெயர் பதிவு செய்தல்,வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்தல் மற்றும் பெயர் சேர்த்தல், நீக்கல் குறித்து ஆட்சேபனை தெரிவித்தல்,முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றது. இந்த பணிகளில் வாக்குச்சாவடி மைய அலுவலர், வாக்குச்சாவடிநிலை அலுவலர்கள், வி.ஏ.ஓ, உதவியாளர்கள் மற்றும் வருவாய் துறையினர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு தேவைப்படும் மனுக்களை பூர்த்தி செய்து மனுக்களுடன் உரிய சான்றுகளை சமர்ப்பித்தனர்.
Next Story
