உடுமலை அருகே ஜம்புக்கல் மலைத்தொடர் ஆக்கிரமிப்பு

வருவாய் கோட்டாட்சியரிடம் விவசாயிகள் புகார்
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே ஆண்டிய கவுண்டனூர் ஊராட்சி பகுதியில் சுமார் 2870 ஏக்கர் ஏக்கரில் ஜம்புக்கல் மலைத்தொடர் அமைந்துள்ளது. இங்கு, 1970 - 71ம் ஆண்டில், சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த, 350 நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு நிலங்கள் வழங்கப்பட்டன.அப்போதுஇந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக மோசடி ஆவணங்கள் வாயிலாக தனிநபர் ஓருவர் நிலத்தை அபகரித்ததோடு, ஒட்டுமொத்த மலைத்தொடரும் அழிக்கப்பட்டுள்ளது.இதை மீட்க வேண்டும் என பாதிக்கப்பட்ட உடுமலை கோட்டாட்சியர் குமார் அவர்களிடம் இன்று மனு அளித்தனர். விவசாயிகள் கூறியதாவது: தற்போது அரசு வழங்கிய இடங்களின் உரிமையாளர்களை மிரட்டியும், பட்டா, சிட்டா, வாரிசு சான்று உள்ளிட்டவற்றை மோசடியாக தயாரித்தும், ஆள் மாறாட்டம் செய்தும், நிலங்களை ஜம்புக்கல் எஸ்டேட் என்ற பெயரிலும், தனி நபர்கள் பெயரிலும் பெயர் மாற்றம் செய்துள்ளனர்.உண்மையான உரிமையாளர்கள், வாரிசுகள் உள்ளே செல்ல முடியாமல் தடுத்து மிரட்டுகின்றனர். பசுமையான மலை அழைக்கப்பட்டு வருகின்றது மேலும் விவசாய நிலங்களுக்குள் செல்ல தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது கடந்த மூன்று ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர் கோட்டாட்சியரிடம் புகார் அளித்தும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை மேலும் கோட்டாட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டாலும் விவசாயிகளின் கோரிக்கை மனு பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது எனவே தற்பொழுது புதிதாக பொறுப்பேற்றிருக்கும் வருவாய் கோட்டாட்சியர் குமார் ஆய்வு செய்து உரிய விசாரணை நடத்தி, போலி ஆவணங்கள் வாயிலாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு, விவசாயிகள் நிலங்களை மீட்க வேண்டும். மேலும் இனியும் காலதாமதம் ஏற்படுத்தினால் விவசாயிகள் ஒன்று திரண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என தெரிவித்தனர்
Next Story