குண்டர் தடுப்பு சட்டத்தில் நான்கு பேர் கைது
Komarapalayam King 24x7 |18 Nov 2024 5:01 PM GMT
குமாரபாளையத்தில் போதை ஊசி, போதை மாத்திரை விற்ற நால்வர் கைது செய்யப்பட்ட நிலையில் இவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் குள்ளங்காடு பகுதியை சேர்ந்த கவுதம்ராஜ், 21, என்பவர், அக். 6ல் போதை ஊசி செலுத்திக்கொன்டதால் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். இதுகுறித்து இவரது மனைவி அனுசுயா, புகார் கொடுத்ததின் பேரில், குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணை அடிப்படையில் உயிரிழந்த கௌதம் ராஜ் நண்பர்கள் போதை ஊசி மருந்து விற்றதாக ஜெகன்ராஜ், 23, சீனிவாசன், 21, ஸ்ரீதர், 19, சண்முகராஜ், 19, நால்வர் கைது செய்யப்பட்டனர். அந்தியூர், விக்கி என்பவர் தலைமறைவானார். மேலும் இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் சூழ்நிலையில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நால்வர் மீதும் நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் பரிந்துரையின் பெயரில் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உத்தரவின் பேரிலும் சிறையில் உள்ள நான்கு பேரும் குண்டர் தடுப்பு சட்டப்படி கைது செய்யப்பட்டனர் இதெழுத்து குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணி தலைமையில் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் குற்றவாளிகள் நான்கு பேர் சிறையில் அடைக்கப்பட்டதை அவர்களது உறவினர்களுக்கு தெரிவித்தனர்
Next Story