கறம்பக்குடி அருகே பள்ளி மாணவன் மாயம்!
Pudukkottai King 24x7 |19 Nov 2024 4:08 AM GMT
காணவில்லை
கறம்பக்குடி அம்பு கோவிலை சேர்ந்த கல்யாணியின் 15 வயது மகன் அம்புக்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவன் கடந்த 15ஆம் தேதி காலை 8 மணிக்கு பள்ளிக்கூடம் சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாய் கல்யாணி நேற்று அளித்த புகாரின் பேரில் கறம்பக்குடி எஸ் எஸ் ஐ சற்குணம் விசாரணை செய்து வருகிறார்.
Next Story