உடுமலையில் இலவச கேஸ் சர்வீஸ் முகாம்

அதிகாரிகள் பங்கேற்பு
உடுமலை பாரத் கேஸ் விநியோகஸ்தரான உடுமலை செல்வி கேஸ் ஏஜென்சி சார்பில் கேஸ் அடுப்பு பழுது நீக்கம் இலவச சர்வீஸ் முகாம் அலுவலக வளாகத்தில் நடந்தது. கோவை மண்டல பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் மண்டல மேலாளர் ஷாஷாங் சர்மா மற்றும் சேல்ஸ்எக்ஸ்குட்டிவ் நிஷாங்கா ஆகியோர் அறிவுரையின்படி உடுமலை செல்வி கேஸ் ஏஜென்சிஸ் உரிமையாளர் எம்பி அய்யப்பன் கேஸ் அடுப்பை பயன்படுத்தும் விதம் கேஸ் சிலிண்டரை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி பயன்படுத்தும் போது என்னென்ன பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என வாடிக்கையாளர்களிடம் விளக்கிக் கூறினார். மேலும் கேஸ் ஸ்டவ் களை குறைந்தது 6 மாதத்துக்கு ஒரு முறையாவது சர்வீஸ் செய்வது அவசியம் அவ்வாறு செய்வதால் சிலிண்டரில் இருந்து வரும் எரிவாயு தடைப்படாமல் ஸ்டவ்விற்கு செல்கிறது இதன் மூலம் கேஸ் கசிவு ஏற்படுவதை முன்கூட்டியே தடுக்கலாம் மேலும் எரிவாயு சேமிப்புக்கு வழி வகுக்கும் என விளக்கி கூறினார்.
Next Story