பொன்நகரில் கடனை அடைத்து விட்டு கடையை திற எனக் மனைவி கூறியதால் கணவன் தூக்கிட்டு தற்கொலை.
Karur King 24x7 |19 Nov 2024 12:41 PM GMT
பொன்நகரில் கடனை அடைத்து விட்டு கடையை திற எனக் மனைவி கூறியதால் கணவன் தூக்கிட்டு தற்கொலை.
பொன்நகரில் கடனை அடைத்து விட்டு கடையை திற எனக் மனைவி கூறியதால் கணவன் தூக்கிட்டு தற்கொலை. திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டி, நத்தம் புதூர், கிழக்கு தெருவை சேர்ந்தவர்கள் விஜயகுமார் 37 விஜயலட்சுமி 36 தம்பதிகள். இவர்கள் தற்போது கரூர் மாவட்டம், தாந்தோணி மலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொன் நகர் பகுதியில் வசித்து வருகின்றனர். விஜயகுமார் புதிதாக மெக்கானிக் கடை ஒன்றை திறக்க முற்பட்டுள்ளார். இது தொடர்பாக கணவன் மனைவிக்கிடையே சச்சரவு ஏற்பட்டுள்ளது. அப்போது மனைவி விஜயலட்சுமி, கணவன் விஜயகுமாரை ஏற்கனவே உள்ள கடனை அடைத்து விட்டு கடையை திற கூறி திட்டி உள்ளார். இதனால் மன விரக்தி அடைந்த விஜயகுமார், நவம்பர் 18ஆம் தேதி இரவு 7:45 மணி அளவில், அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி, இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த விஜய் குமாரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தாந்தோணிமலை காவல்துறையினர்.
Next Story