குடிநீரில் சாயக் கழிவு நீர் கலப்பு அதிகாரிகள் விசாரணை

குடிநீரில் சாயக் கழிவு நீர் கலப்பு அதிகாரிகள் விசாரணை
குடிநீர் குழாயில் சாயக் கழிவுநீர் கலந்ததால் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்
பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட 12வது வார்டு பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில், திங்களன்று போர்வெல் குடிநீரில் இருந்து வெளியேறிய நீர் சிவப்பு நிறத்தில் நிறம் மாறி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், இது குறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய குழுவினர் நிறம் மாறி காணப்பட்ட கிணற்று நீரை ஆய்வு மேற்கொண்டு, கிணற்றில் எவ்வகையான கழிவுநீர் கலந்துள்ளது என்பதை கண்டறியும் வகையில் கிணற்று நீர் மாதிரியை சேகரித்து சென்றனர். பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதி முழுவதும் சாயப்பட்டறைகளில் இருந்து நீர் சுத்திகரிக்கப்படாமல் அப்படியே நேரடியாக சாக்கடை கால்வாய் வழியாக காவிரி ஆற்றில் கலக்கப்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ள நிலையில், தற்போது கிணற்று நீரில் சிவப்பு கலரில் நீர் நிறம் மாறி காணப்படுவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story