சேங்கல் அருகே இரவு நேரத்தில் வீடு புகுந்து கொள்ளையடித்துச் சென்ற முகமூடி கொள்ளையர்களை சுற்றி வளைத்து கைது செய்த காவல்துறையினர்.
Karur King 24x7 |19 Nov 2024 1:51 PM GMT
சேங்கல் அருகே இரவு நேரத்தில் வீடு புகுந்து கொள்ளையடித்துச் சென்ற முகமூடி கொள்ளையர்களை சுற்றி வளைத்து கைது செய்த காவல்துறையினர்.
சேங்கல் அருகே இரவு நேரத்தில் வீடு புகுந்து கொள்ளையடித்துச் சென்ற முகமூடி கொள்ளையர்களை சுற்றி வளைத்து கைது செய்த காவல்துறையினர். கரூர் மாவட்டம், மாயனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேங்கல் அருகே உள்ள மேலே பண்ணை களத்தில் வசித்து வருபவர்கள் ரவிச்சந்திரன்- சுப்புரத்தினம் தம்பதிகள். இவர்கள் கடந்த அக்டோபர் 25ஆம் தேதி இரவு 10:30 மணி அளவில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் ஆயுதங்களுடன் வீட்டின் பின் கதவு வழியாக நுழைந்து, வீட்டில் உறங்கியவர்களை எழுப்பி, அவர்களை மிரட்டி பணம்,நகைகளை கொள்ளை அடித்து அங்கிருந்து காரில் ஏறி தப்பித்துச் சென்றனர். இந்த சம்பவம் அறிந்த கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின் பேரில் குளித்தலை காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, சம்பவம் நடைபெற்ற சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்து,தீவிர விசாரணை மேற்கொண்டதில் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சிவகங்கை மாவட்டம் விக்னேஸ்வரன், தினேஷ் வேலன், முத்துப்பாண்டி, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த வெங்கடேஷ், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த மற்றொரு விக்னேஸ்வரன், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அருண்குமார் என 6- பேரையும் சுற்றிவளைத்து கைது செய்து, கொள்ளையடித்துச் சென்ற நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்து, இந்த கொள்ளை சம்பவத்துக்காக பயன்படுத்திய கார், இருசக்கர வாகனம், அரிவாள் போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்து,6-பேரையும் சிறையில் அடைத்தனர்.
Next Story