பைக் விபத்தில் காயமடைந்த விவசாயி மருத்துவமனையில் உயிரிழப்பு

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் அருகே புதுப்பட்டி நடுத்தெருவைச் சோ்ந்த ராமசுப்பு மகன் சேகா் (44). விவசாயியான இவா், சில நாள்களுக்கு முன்பு பைக்கில் புதுப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது, பைக் நிலைதடுமாறியதில் அவா் கீழே விழுந்து காயமடைந்தாா். அவரை அப்பகுதியினா் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார் . இது தொடா்பாக திருவேங்கடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Next Story

