ராமர் கோவில் கும்பாபிஷேக விழா
Komarapalayam King 24x7 |20 Nov 2024 1:32 PM GMT
குமாரபாளையத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ ராமர் சீதாதேவி கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா அக். 28ல் சுப முகூர்த்தகால் நடுதலுடன் துவங்கியது. அக். 8ல் முளை ப்பாலிகை இடுதல், காலை மகா கணபதி ஹோமம், காவேரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் மஞ்சள் ஆடை அணிந்தவாறு தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். அக்.18, 19 யாக சாலை பூஜைகள் நடந்து, நேற்று மகா கும்பாபிஷேக விழா நடந்தது. யாகசாலை பூஜைகள் திருப்பதி சுதர்சன நாராயணன் வாசுதேவ பட்டாச்சாரியார் குழுவினர் நடத்தினர். விழாவையொட்டி பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story