கரூரில், பள்ளி மாணவ,-மாணவிகள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை டி எஸ் பி செல்வராஜ் துவக்கி வைத்தார்.
Karur King 24x7 |21 Nov 2024 6:29 AM GMT
கரூரில், பள்ளி மாணவ,-மாணவிகள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை டி எஸ் பி செல்வராஜ் துவக்கி வைத்தார்.
கரூரில், பள்ளி மாணவ,-மாணவிகள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை டி எஸ் பி செல்வராஜ் துவக்கி வைத்தார். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காம்புலியூர் பகுதியில் செயல்படும் சைதன்யா டெக்னோ பள்ளி சார்பாக மாதம் தோறும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு நவம்பர் மாதத்திற்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று கரூர் 80 அடி சாலையில் கரூர் காவல்துறை கண்காணிப்பாளர் செல்வராஜ் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். 80 அடி சாலையில் துவங்கி, பேருந்து நிலையம் ரவுண்டான, ஜவஹர் பஜார் வழியாக கரூர் மாநகராட்சி அலுவலகத்தை விழிப்புணர்வு பேரணி வந்து அடைந்தது. பேரணியில், இந்த பள்ளியில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர்,இருபால் ஆசிரியர்கள், பள்ளி வாகனத்தின் ஓட்டுநர்கள் என ஏராளமானோர் இந்த பேரணியில் கலந்து கொண்டு, சாலை பாதுகாப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் வடிவுக்கரசி, நிர்வாக அலுவலர் பூவரசன், ஒருங்கிணைப்பாளர் ஜெயஸ்ரீ உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை சிறப்பாக நடத்தினர்.
Next Story