திருப்பத்தூர் வழக்கறிஞர் சங்கம் சார்பில் நீதிமன்ற புறக்கணிப்பு

திருப்பத்தூர் வழக்கறிஞர் சங்கம் சார்பில் நீதிமன்ற புறக்கணிப்பு
திருப்பத்தூர் வழக்கறிஞர் சங்கம் சார்பில் நீதிமன்ற புறக்கணிப்பு
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் வெட்டப்பட்டதை கண்டித்து திருப்பத்தூர் வழக்கறிஞர் சங்கம் சார்பில் நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் நிவாரணம் வழங்க கோரி கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம்* ஒசூரில் நீதிமன்ற வளாகத்துக்குள் வழக்கறிஞர் கண்ணன் மிக கொடூரமாக அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை வெறி தாக்குதலை நிகழ்த்திய பயிற்சி வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், அவரது மனைவியையும் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் அதன் எதிரொலியாக திருப்பத்தூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இன்று மற்றும் நாளை ஆகிய இரு நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் கண்ணனுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் எனவும் மேலும் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது எனவும் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story