சேந்தமங்கலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்ட - சாலைப்பணி ஆய்வு.
Namakkal (Off) King 24x7 |21 Nov 2024 10:26 AM GMT
நாமக்கல்லில் சேந்தமங்கலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்தில் நடைபெற்று வரும் காந்தி வரும் காரவள்ளி சாலை வழி சிறப்பு பழுதுபார்த்தல் பணி நடைபெற்று வருகிறது.
நாமக்கல் நெடுஞ்சாலை கோட்டத்திற்கு உட்பட்ட, சேந்தமங்கலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்தில், நடைபெற்று வரும் காந்திபுரம் காரவள்ளி சாலை (வழி) இராமநாதபுரம்புதூர் சாலை கி.மீ. 10/0-11/0 வரை சிறப்பு பழுது பார்த்தல் பணி ரூ.65.00 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இப்பணியினை சேலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்புப் பொறியாளர் திரு.சி. சசிக்குமார் அவர்கள் இப்பணிக்கான சுடுகலவையின் வெப்ப நிலை, சாலையின் கணம், சாலையின் மேல்தள சாய்வு ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார். மேலும். ஆய்வின் போது, சாலைப் பணிகளை, காலதாமதமின்றி தரமாகவும் விரைவாகவும் முடித்து, பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்நிகழ்வில், நெடுஞ்சாலைத்துறை க(ம)ப கோட்டப்பொறியாளர் கே.ஆர்.திருகுணா அவர்கள், சேந்தமங்கலம் நெடுஞ்சாலை க(ம)ப உதவிக்கோட்டப்பொறியாளர் இரா.சுரேஷ்குமார் மற்றும் உதவிப்பொறியாளர் அ.க.பிரனேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story