சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை தொடங்கி வைத்த பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியர்.

சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை  தொடங்கி வைத்த பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியர்.
2023-24 கரும்பு அரவைப் பருவத்தில் அரவை செய்த கரும்புக்கு கரும்பு கிரயத் தொகையாக அங்கத்தினர்களுக்குரூ.48.18 கோடி நிலுவையின்றி ஒரே தவணையில் வழங்கப்பட்டுள்ளது.பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் பெருமிதம்.
நாமக்கல் மாவட்டம், மோகனூர், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான கரும்பு அரவையை இன்று பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, தலைமையில் தொடங்கி வைத்தார். சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2024-25-ஆம் ஆண்டு கரும்பு அரவைப் பருவம் இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. நடப்பு அரவைப் பருவத்திற்கு 396 ஏக்கர் நடவு கரும்பும், 2053 ஏக்கர் மறுதாம்பு கரும்பும் ஆக மொத்தம் 2449 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட பதிவு பரப்பிலிருந்து ஏக்கர் ஒன்றுக்கு 36.75 டன்கள் சராசரி விளைச்சல் மதிப்பீடாக கணக்கீடு செய்யப்பட்டு மொத்தம் 90,000 டன்கள் பதிவு கரும்பும், ஆலையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பதிவில்லாக் கரும்புகளை நேரடி பதிவு மூலம் பதிவு செய்து அதன் மூலம் 10,000 டன்களும் ஆக மொத்தம் 2024-25 அரவைப் பருவத்தில் மொத்தம் 1.00 இலட்சம் டன்கள் கரும்பு அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆலை 2023-24 கரும்பு அரவைப் பருவத்தில் 1.65 லட்சம் டன்கள் 7.77 சதவிகித சர்க்கரை கட்டுமானத்தில் அரவை செய்துள்ளது. அரவை செய்த கரும்புக்கு ஒன்றிய அரசு அறிவித்த கரும்பு கிரயத் தொகை டன் ஒன்றுக்கு ரூ.2919.75 வீதம் மொத்தம் ரூ.48.18 கோடி அங்கத்தினர்களுக்கு நிலுவையின்றி ஒரே தவணையில் வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் அட்மா குழுத்தலைவர் நவலடி, மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் க.ரா.மல்லிகா, விவசாய பெருமக்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story