பெண் தூக்கிட்டு தற்கொலை
Tirupathur King 24x7 |21 Nov 2024 10:50 AM GMT
திருப்பத்தூர் அருகே திருமணமான நான்கே மாதங்களில் பெண் தூக்கிட்டு தற்கொலை! மருமகன் மீது காவல் நிலையத்தில் மாமனார் புகார்!
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே திருமணமான நான்கே மாதங்களில் பெண் தூக்கிட்டு தற்கொலை! மருமகன் மீது காவல் நிலையத்தில் மாமனார் புகார்! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த முரளி என்பவரின் மகள் மீனாட்சி (23) என்பவரும் திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரின் மகன் விஜய் (28)ஆகிய இருவரும் இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் இருப்பினும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த ஏழாம் மாதம் நடைபெற்று தங்களால் முடிந்த சீர்வரிசைகளை கொடுத்துள்ளனர். இந்த நிலையில் விஜய் குடும்பத்தினர் மீனாட்சியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாகவும் இது குறித்து மீனாட்சி தனது குடும்பத்தில் தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வருகின்றனர் என்றும் கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில் திரும்பவும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதன் காரணமாக நேற்று மீனாட்சி வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் இந்த சம்பவம் குறித்து அவருடைய தந்தைக்கு தெரிய வர தனது மருமகனான விஜயின் மீது திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் வரதட்சனை கேட்டுக் கொடுமைப்படுத்தியதாக புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் திருப்பத்தூர் கிராமிய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருமணமாகி நான்கு மாதங்களே நிலையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரதட்சணை கொடுமையால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
Next Story