ராசிபுரத்தில் சணலினால் தயாரிக்கப்படும் பொருட்கள் பயிற்சி முகாம் துவக்கம்..

ராசிபுரத்தில் சணலினால் தயாரிக்கப்படும் பொருட்கள் பயிற்சி முகாம் துவக்கம்..
ராசிபுரத்தில் சணலினால் தயாரிக்கப்படும் பொருட்கள் பயிற்சி முகாம் துவக்கம்..
சிறு தொழில் மேம்பாட்டு நிறுவனம் (சிப்போ), தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மத்திய, மாநில அரசு நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் 1991-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு நிறுவனம் ஆகும். 2010 ஆண்டு முதல் சிறு தொழில் மேம்பாட்டு நிறுவனமானது, இந்திய அரசு ஐவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், தேசிய சணல் வாரியத்துடன் இணைந்து சணல் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி (Jute Training), சணல் சார்ந்த பொருட்கள் குறித்த விழிப்புணர்வு பட்டறைகள் (Awareness Workshop on Jute Based Products), ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு சந்தைப்படுத்தல் பயிற்சிகள் (Export & Domestic Marketing Programme) மற்றும் இப்பயிற்சிக்கு பிறகு பயிற்சியில் பங்கேற்ற பயனாளிக்கு அவர்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்த கண்காட்சிகளை (Buyer Seller Meet Exhibition) நடத்தி அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களை சந்தைபடுத்துவதற்காக வாய்ப்புகளை சிப்போ நிறுவனமானது செய்து வருகின்றது. இதன் மூலம் அவர்களின் வாழ்க்கை தரம் உயரவும் நிரந்தர வருமானம் ஈட்டவும் வாய்ப்பு ஏற்படுத்தி வருகின்றது. இதுவரை 5000 மேற்பட்ட தொழில் முனைவோர்களை உருவாக்கியுள்ளது. தற்போது, தேசிய சணல் வாரியம், JRCPC திட்டத்தின் கீழ் 2024-25ஆண்டிற்கான சணல் பொருட்கள் தயாரித்தல் பயிற்சியை நடத்த சிப்போ நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, சணல் உற்பத்தி பொருட்களுக்கான அடிப்படை பயிற்சியானது (Basic Training)- 14 நாட்கள், உயர்நிலைப் பயிற்சி (Advance Training)- 7 நாட்கள் மற்றும் வடிவமைப்பு பயிற்சி (Design Training)-14 நாட்களும் 21.11.2024 முதல் 24.12.2024 தேதி வரை நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பாரதி நகர் பகுதியில் உள்ள முத்தமிழ் பள்ளியில் நடைபெறுகிறது. இப்பயிற்சியில் 20.க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துக் கொண்டு பயனடைய உள்ளனர். இப்பயிற்சியின் முடிவில் பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. மேலும் இபபயிற்சியை வெற்றிகரமாக முடித்த பெண்களுக்கு கைவினை கலைஞர்களுக்கான அடையாள அட்டை பெறுவதற்கும், தொழில் தொடங்குவதற்கு, மற்றும் தொழிற்கடன் பெறுவதற்க்கும் வழிகாட்டுதலும், வழங்கப்படவுள்ளது. மேலும் பொருட்கள் சந்தைப்படுத்துதல் ஆலோசனைகள் வழங்கினர். இப்பயிற்சியின் துவக்க விழாவில் நாமக்கல் மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் திருமதி. வி. சகுந்தலா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறு தொழில் மேம்பாட்டு மற்றும் தொழில் சந்தைப்படுத்துதல் வருமானம் ஈட்டுதல் உள்ளிட்ட பல்வேறு விளக்கங்கள் அளித்து பேசினார், மேலும் சிப்போ நிறுவனத்தின் பொது மேலாளர் கே..பழனிவேல்முருகன் அவர்கள் முன்னிலையில் நிறுவன ஒருங்கிணைப்பாளர் கே. ரவி தலைமையில் இந்த பயிற்சி துவக்கி வைக்கப்பட்டது. இதில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆர் சரண் ராஜ், உள்ளிட்ட நிர்வாகிகள் அலுவலர்கள் மற்றும் பயிற்சி பெறும் பெண்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story