உணவு பாதுகாப்புத் துறையின் சார்பாக உணவு பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்பு
Komarapalayam King 24x7 |21 Nov 2024 3:27 PM GMT
நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் சார்பாக உணவு வணிகர்களுக்கு, உணவு பாதுகாப்பு உணவு கையாளுப்பவர்களுக்கான பயிற்சி வகுப்பு குமாரபாளையம் ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடந்தது.
நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் சார்பாக உணவு வணிகர்களுக்கு, உணவு பாதுகாப்பு உணவு கையாளுப்பவர்களுக்கான பயிற்சி வகுப்பு குமாரபாளையம் ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடந்தது. இதில் மளிகை, சில்லறை விற்பனையாளர்கள் மொத்த விற்பனையாளர்கள் அவர்களுக்கான பயிற்சி நடந்தது. இதில் குமாரபாளையம் வட்டார உணவு வணிகர்கள் 80 பேர் பங்கேற்று பயிற்சி பெற்றனர். மேலும் ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி, மீன் விற்பனை செய்பவர்களுக்கான உணவு பாதுகாப்பு பயிற்சி வகுப்பு நடந்தது. இதில் 70 பேர் இறைச்சி வணிகம் செய்பவர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு இறைச்சிக் கடையை நடத்த பின்பற்ற வேண்டிய உணவு பாதுகாப்பு விதிமுறைகளை பற்றி அறிவுறுத்தப்பட்டது. இப்பயிற்சி வகுப்பினை பள்ளிபாளையம் உணவு பாதுகாப்பு அலுவலர் ரெங்கநாதன், குமாரபாளையம் உணவு பாதுகாப்பு அலுவலர் லோகநாதன் ஆகியோர் ஏற்பாடு செய்ய, பரிக்ஷன் நிறுவனம் சார்பாக மீனா பயிற்சியளித்தார்.
Next Story