ஏமூரில் லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் போக்குவரத்து பாதிப்பு. இடிபாட்டில் சிக்கிய டிரைவரை போராடி மீட்ட தீயணைப்பு மற்றும் காவல் துறையினர்

ஏமூரில் லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் போக்குவரத்து பாதிப்பு. இடிபாட்டில் சிக்கிய டிரைவரை போராடி மீட்ட தீயணைப்பு மற்றும் காவல் துறையினர்
ஏமூரில் லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் போக்குவரத்து பாதிப்பு. இடிபாட்டில் சிக்கிய டிரைவரை போராடி மீட்ட தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏமூர் பகுதியில் ரயில்வே தண்டவாளங்களை ஏற்றி சென்ற லாரி யூ-டர்ன் எடுக்க திரும்பும் போது, பின்னால் அதனை தொடர்ந்து வந்த எம்.சாண்ட் மணல் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் திருமுருகன் ப்ளூ மெட்டல் என்ற தனியார் கல்குவாரிக்கு சொந்தமான எம்.சாண்ட் மணல் லாரி எஞ்சின் முன்பகுதி சேதம் அடைந்ததில், கரூர் மாவட்டம், வடவம்பாடி ஊராட்சிக்குட்பட்ட கோனிச்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஓட்டுனர் தங்கவேல் என்பவர் இடுபாடுகளில் சிக்கிக் கொண்டார். அவரை மீட்கும் பணியில் 2 ஜேசிபி மற்றும் 3 கிரைன் வாகனங்களின் உதவியுடன் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டனர். இதனால், தேசிய நெடுஞ்சாலையில் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், மாற்றுப் பாதையில் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டது. விபத்தில் இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட லாரி ஓட்டுனரை மீட்கும் பணியில் 3 மணி நேரத்திற்கு மேலாக தீயணைப்பு மீட்பு படை வீரர்களும், காவல்துறையினரும் கடுமையாக போராடி ஓட்டுநர் தங்கவேல் காயங்களுடன் மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சம்பவத்தை காண பொதுமக்கள் அதிகளவில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய லாரி ஓட்டுநர் குறித்தும், விபத்துக்கான காரணம் குறித்தும் வெள்ளியணை காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story