வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியின் பட்டமளிப்பு விழா
வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியின் பட்டமளிப்பு விழா
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியின் பட்டமளிப்பு விழா தமிழ் நாடு அரசின் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் உதவித்தொகை அளித்து வருவதால் 35 சதவீதம் உயர்கல்வி பயிலும் மாணவிகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில கவுன்சில் செயலாளர் பேராசிரியர் முனைவர் எஸ்.வின்சென்ட் தகவல். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியின் 26 வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் எம்.விமல்சந்த் ஜெயின் தலைமை வகித்தார். இணை தலைவர் சி.லிக்மிசந்த் ஜெயின், கல்லூரி அனைத்து துறை தலைவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் எம்.இன்பவள்ளி அனைவரையும் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில கவுன்சில் உறுப்பினர் செயலாளர் பேராசிரியர் முனைவர் எஸ்.வின்சென்ட் கலந்து கொண்டு திருவள்ளுவர் பல்கலைக் கழத்தேர்வில் மாணவிகள் 10 தங்கப்பதக்கங்களையும், தரவரிசைப்பட்டியலில் 102 இடங்களையும் பெற்று இளங்கலை மாணவிகள் 700 பேரும், முதுகலையில் 246 பேரும் மொத்தம் 946 மாணவிகள் மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கியும், பல்கலைக்கழகத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற துறைகளுக்கு சுழல் கேடயம் வழங்கி வாழ்த்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- உங்களை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றியதற்காக உங்களுடைய பெற்றோர்கள், கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோருக்கு வாழ்நாளில் மறுக்கக்கூடாது. கடின உழைப்பு, விடாமுயற்சி, நேர்மறை எண்ணம் உங்களுடைய குறிக்கோள்களை வெற்றியடையச் செய்யும். தமிழ் நாடு அரசு பெண்கல்வியை ஊக்குவிக்கவும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும், புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் உதவித்தொகை அளித்து வருவதால் 35 சதவீதம் உயர்கல்வி பயிலும் மாணவிகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதோடு உங்களுடைய கல்வியை நிறுத்தி விடாமல் தொடர்ந்து ஆராய்ச்சிப் படிப்பைத் தொடருங்கள் என்று வாழ்த்தினார். நிகழ்ச்சியில் ஸ்ரீ மருதர் கேசரி ஜெயின் அறக்கட்டளை உறுப்பினர்கள்,கல்லூரி பேராசிரியைகள், மாணவிகளின் பெற்றோர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர்.
Next Story