செவல்குளத்தில் ரேசன் கடையை ராஜா எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
Sankarankoil King 24x7 |22 Nov 2024 9:04 AM GMT
ரேசன் கடையை ராஜா எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள குருவிகுளம் யூனியனுக்கு உட்பட்ட செவல்குளம் ஊராட்சி கோபாலகிருஷ்ணபுரத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக பகுதி நேர ரேஷன் கடையை தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் வழக்கறிஞர் ராஜா எம். எல். ஏ. திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மேலாளர் தொமுச ) ஜெயராமன், கிளை மேலாளர் முருகேஸ்வரி, செவல்குளம் கூட்டுறவு சங்க செயலாளர் மீனாட்சி, திமுக மாவட்ட கவுன்சிலர் சுதா பிரபாகரன், ஒன்றிய கவுன்சிலர் விஜயலட்சுமி, ஒன்றிய துணை செயலாளர் மலைப்பட்டி மாடசாமி, கழக முன்னோடி மாடசாமி இளைஞர் அணி பாலமுருகன், மகேந்திரன், செல்வம், ராஜேந்திரன்,சமுத்திரவேல், விசிக சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி செயலாளர் ஜெரால்டு, நிகழ்ச்சி ஏற்பாடுகளை குருவிகுளம் தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி செவல்குளம் குட்டி செய்திருந்தார்.
Next Story