கோபிசெட்டிபாளையம் அருகே விபத்தில் தொழிலாளி பலி

கோபிசெட்டிபாளையம் அருகே விபத்தில் தொழிலாளி பலி
கோபிசெட்டிபாளையம் அருகே விபத்தில் தொழிலாளி பலி
கோபி அருகே விபத்தில் தொழிலாளி பலி தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டிபுதூரை சேர்ந்தவர் பெருமாள். அவருடைய மகன் சந்திரசேகரன் (வயது 38). இவர் கோபி அருகே உள்ள வேட்டைக்காரன்கோவிலில் உள்ள ஓட்டலில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சந்திரசேகரன் கோபி-குன்னத்தூர் ரோட்டில் உள்ள வாய்க்கால்மேடு அருகே பால் வாங்க மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மினி வேனும், சந்திரசேகரன் சென்ற மொபட்டும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன. இந்த விபத்தில் மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்ட சந்திரசேகரன் படுகாயம் அடைந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு சந்திரசேகரன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றர்னர்.
Next Story