கடம்பூரில் வனவிலங்குகள் நடமாடும் பகுதியில் கீழே தொங்கும் மின் கம்பி
Bhavanisagar King 24x7 |22 Nov 2024 9:13 AM GMT
கடம்பூரில் வனவிலங்குகள் நடமாடும் பகுதியில் கீழே தொங்கும் மின் கம்பி
கடம்பூரில் வனவிலங்குகள் நடமாடும் பகுதியில் கீழே தொங்கும் மின் கம்பி கடம்பூர் மலைப்பகுதியில் ஆபத்தான முறையில் கீழே தொங்கும் மின் கம்பியால் வனவிலங்குகள் விபத்தில் சிக்கும் அபாயம் சத்தி அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கு மின்வாரியம் மின் கம்பங்கள் அமைத்து மின் கம்பிகள் மூலம் மின்சாரம் கொண்டு செல்கின்றனர். இந்தப் பகுதி சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதி என்பதால் சிறுத்தை, மான் காட்டு எருமை, யானை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்கு வசிக்கின்றன. இந்நிலையில் கடம்பூர் இருந்து இருட்டிபாளையம் வழியாக பவளக்குட்டை செல்லும் வழியில் வனவிலங்கு சாலையை கடக்கும் இடத்தில் மின் கம்பியானது கீழேயும் தொங்கியபடி காணப்படுகிறது. இதனால் அடிக்கடி வீடுகளில் மின்தடை ஏற்படுவதோடு காற்று அடிக்கும் போது மின்சாரம் விட்டு விட்டு வருவதால் அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் அந்த இடத்தை கடந்து செல்ல வேண்டியதாக உள்ளது. மேலும் வனவிலங்கு நடமாடும் பகுதி என்பதால் உணவு மற்றும் குடிநீர் தேடி யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அந்த இடத்தை கடந்தால் வனவிலங்குகள் மின் கம்பியில் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து மின்வாரி அதிகாரிக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து கிராம மக்கள் கூறும் போது மின்கம்பி தொங்கும் இடம் வனவிலங்கு நடமாடும் பகுதி இரவு நேரங்களில் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி இந்த இடத்தை கடந்தால் மின் கம்பியில் சிக்கி மிகப்பெரிய ஆபத்து நடக்க வாய்ப்புள்ளது. உடனடியாக மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பியை பாதுகாப்பான முறையில் அமைக்க வேண்டுமென கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story