பணிகளை விரைந்து முடிக்க கோரி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

பணிகளை விரைந்து முடிக்க கோரி அலுவலர்களுக்கு  மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர்.ப.சுப்பராயன் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் கட்டப்பட்டு வரும் நினைவு அரங்கத்தினை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, அலுவலர்களுக்கு உத்தரவு.
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், நவணி தோட்டக்கூர்பட்டி கிராம ஊராட்சியில் இன்று மாவட்ட ஆட்சியர் சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர்.ப.சுப்பராயன் அவர்களுக்கு செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் கட்டப்பட்டு வரும் நினைவு அரங்கத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக் கூட்டத் தொடரில் 06.09.2021 அன்று 2021-2022ஆம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மானியக் கோரிக்கையின் போது செய்தித் துறை அமைச்சர் "தமிழுக்கும். தமிழக மக்களுக்கும் அயராது உழைத்தவரும், சமூகநீதிக் கோட்பாடுகளுக்காகச் சட்டவடிவம் கொடுத்தவருமான, சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ப.சுப்பராயன் அவர்களது சேவைகளை நினைவுகூறும் வகையில் நாமக்கல் நகரில் அன்னாரின் பெயரில் ஓர் அரங்கம் அமைக்க ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்" என அறிவிப்பு வெளியிட்டார்.அதனைத்தொடர்ந்து, 10.05.2023 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் காணொலிக்காட்சி வாயிலாக சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர்.ப.சுப்பராயன் அவர்களுக்கு ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் நினைவு அரங்கம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், இன்றைய ஆய்வில் 250 நபர்கள் அமரக்கூடிய வகையில் கட்டப்பட்டு வரும் நினைவு அரங்கத்தின் பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்து, அரங்கம், உணவு கூடம், சமையலறை, கழிவறை, வாகன நிறுத்துமிடம் மற்றும் 200 பேர் அமர்ந்து உணவு அருந்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள உணவு கூடம் ஆகியவற்றை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.தே.ராம்குமார் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story