நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் மூலம் பல கால்நடைகளுக்கு மருத்துவம் வழங்கப்பட்டு வருகிறது மாவட்ட ஆட்சியர் தகவல்.

நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் மூலம் பல கால்நடைகளுக்கு மருத்துவம் வழங்கப்பட்டு வருகிறது மாவட்ட ஆட்சியர் தகவல்.
நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் மூலம் சுமார் 400 க்கு மேற்பட்ட கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, தகவல்.
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், எஸ்.உடுப்பம் ஊராட்சி, செங்கோடம்பாளையம் கிராமத்தில் இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில், நடமாடும் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டத்தில் 1 கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், 5 கால்நடை மருத்துவமனைகள், 105 கால்நடை மருந்தகங்கள், 8 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் மூலம் கால்நடைகளுக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றது. நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி மூலம் பசு மற்றும் எருமைகளுக்கு செயற்கைமுறை கருவூட்டல், ஆடு மற்றும் கன்றுகளுக்கு குடற்புழு நீக்கம், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, கால்நடைகளுக்கு தடுப்பூசி, சினை ஆய்வு, சினை பிடிக்காத மாடுகளுக்கு சிகிச்சை, கால்நடை மருத்துவ முகாம்களில் கலந்து கொள்ளுதல், கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் பங்கேற்று உதவுதல் போன்ற சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் காலை 8.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை குறிப்பிடப்பட்ட வழித்தடங்களுக்கு சென்று கால்நடைகளுக்கு தேவையான சேவைகளும், மாலை 2.00 மணி முதல் 5.00 மணி வரை 1962 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டால், அவசர அழைப்புகளை ஏற்று கால்நடைகளுக்கு சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகின்றது. நாமக்கல் மாவட்டத்தில் 8 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 40 கால்நடைகளுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது. மேலும், 1 நடமாடும் வாகனத்திற்கு 2 கிராமங்கள் வீதம் சுமார் 25 முதல் 40 கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தினந்தோறும் 8 நடமாடும் ஊர்திகளில் தினசரி 16 கிராமங்களில் சுமார் 400 முதல் 700 கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்ட கால்நடைகள் நோய் தொற்றுகளிலிருந்து பாதுகாக்கப்பட்டு வருகின்றது. எனவே, கால்நடை வளர்ப்போர் இச்சேவைகள பயன்படுத்தி கொண்டு கால்நடைகளுக்கு உரிய சிகிச்சை பெற்று முறையாக பாதுகாத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மேலும், இன்றைய ஆய்வில் நடமாடும் கால்நடை மருத்துவ முகாமை பார்வையிட்டு கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதா, முறையாக சிகிச்சை வழங்கப்படுகிறதா, மருந்துகள் இருப்பு உள்ளதா, வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், நாமக்கல் மாவட்டம்
Next Story