நகராட்சி ஆணையாளரிடம் மனு வழங்கிய அதிமுகவினர்

நகராட்சி ஆணையாளரிடம் மனு வழங்கிய அதிமுகவினர்
நகராட்சி பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி நகராட்சி ஆணையரிடம் அதிமுகவினர் மனு வழங்கல்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி உட்பட்ட வார்டுகளில், நடைபெறாமல் உள்ள சாக்கடை கால்வாய் சீரமைப்பு ,தார் சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், அதிமுக ஆட்சி காலத்தில் பள்ளிபாளையம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட நிழற்கூடம் மேம்பாலம் கட்டுமான பணியால் அகற்றப்பட்டுள்ளது . எனவே நிழற்கூட தகரங்களை பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நகராட்சி வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பள்ளிபாளையம் ஆணையாளரிடம் அதிமுக சார்பில் மனு வழங்கப்பட்டது. ஆணையாளர் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தர்.அதிமுக நகர செயலாளர் முன்னாள் பி.எஸ்.வெள்ளிங்கிரி,அம்மா பேரவை செயலாளர் முன்னாள் நகர TK. சுப்ரமணி , நகராட்சி கவுன்சிலர்கள் சரவணன். செந்தில்,சுரேஷ், சுஜாதா மாரிமுத்து, சம்பூரணம் .சுசிலா ராஜா. நகர துணை செயலாளர் ஜெய்கணேஷ், நகர பொருளாளர் சிவகுமார் ,, மாவட்ட பிரதிநிதி ஆறுமுகம் தகவல் தொழில்நுட்ப பிரிவு சரவணன், சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்...
Next Story