கந்தம்பாளையத்தில் புகையிலை விற்பனை செய்த ஒருவர் கைது.

X
Paramathi Velur King 24x7 |22 Nov 2024 8:31 PM ISTகந்தம்பாளையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த ஒருவரை கைது செய்தனர்.
கந்தம்பாளையம். நவ: 22 நாமக்கல் மாவட்டம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கந்தம்பாளையம் கடைவீதியில் விற்பதாக நல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பெயரில் நல்லூர் போலீசார் மதுவிலக்கு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு சம்பந்தமாக ரோந்து சென்ற போது கந்தம்பாளையத்தில் கிழக்குத் தெருவில் ஒரு மளிகை கடையில் சோதனை செய்த போது சுமார் 9 கிலோ அளவுள்ள புகையிலை பொருட்கள் இருந்ததை கைப்பற்றி கந்தம்பாளையம் கிழக்குத் தெருவை சேர்ந்த கந்தன் என்பவரின் மகன் ஜெயபால் 47 கடை உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
