மகா கணபதி கோவில் கும்பாபிஷேக விழா.

மகா கணபதி கோவில் கும்பாபிஷேக விழா.
பரமத்தி வேலூர் தாலுக்கா கொந்தளம் அருகே உள்ள மகாமுனி நகர் மகா கணபதி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
பரமத்திவேலூர், நவ.22- நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா, கொந்தளம், மகாமுனி நகரில் மகா கணபதி கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டனர். கொந்தளம், மகாமுனி நகரில் எழுந்தருளியுள்ள மகா கணபதி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 20- ஆம் தேதி விநாயகர் வழிபாடு, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் தன பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர். மாலை பூர்ணாகுதி மகா தீபாராதனை நடைபெற்றது. நேற்று வியாழக்கிழமை காலை விநாயகர் வழிபாடு, மங்கள மகா பூர்ணாகுதி யாத்ரா தானம், கலசம் புறப்பாடும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து காலை 9.45 மணிக்கு மேல் 10.45 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மகா கணபதிக்கு சிறப்பு அலங்காரமும், மகா அபிஷேகம் மற்றும் பிரசாதம் வழங்குதலும் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கொந்தளம், மகாமுனி நகர் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Next Story