கோத்தலூத்து ஊராட்சி ஆதிதிராவிட காலனிக்கு மயான வசதி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை.

ஊராட்சி நிர்வாகத்தில் நிதி இல்லாத காரணத்தினால், பணிகளை தொடங்க முடியவில்லை என்று ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
கோத்தலூத்து ஊராட்சி ஆதிதிராவிட காலனிக்கு மயான வசதி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியம் கோத்தலூத்து ஊராட்சியில் உள்ள ஆதி திராவிட காலனிக்கு மயான வசதியை செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் . கோத்தலூத்து ஊராட்சியில், கோத்த லூத்து ,ஆதி திராவிடர் காலனி, மறவ பட்டி, வரதராஜபுரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இதில் ஆதிதிராவிடர் காலணியில் பல ஆண்டுகளாக மயான வசதி செய்து தராத காரணத்தினால், இறந்தவர்களை, தரைப்பகுதியிலேயே வைத்து எரித்தும் ,அடக்கம் செய்தும் வந்தனர். இந்நிலையில் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று ஊராட்சி நிர்வாகம், அப்பகுதியில் உள்ள இடத்தை ஒதுக்கீடு செய்து, ஜேசிபி மூலம் அப்பகுதியை சுத்தம் செய்து வைத்துள்ளனர் .எரி கொட்டகை மற்றும் அமர்வு இடம், சாலை வசதி, பாலம் உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்ய ஊராட்சி நிர்வாகத்தில் நிதி இல்லாத காரணத்தினால், பணிகளை தொடங்க முடியவில்லை என்று ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் உள்ள இப்பகுதியில் நீண்ட நாள் கோரிக்கையான மயான வசதி செய்து தர ஊராட்சி ஒன்றிய நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுத்து நிதி ஒதுக்கீடு செய்து, மேற்படி பணிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என்று இப்பகுதியில் உள்ள ஆதிவிராவிட காலனி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story