தனியார் காகித ஆலை தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
Komarapalayam (Pallipalayam) King 24x7 |23 Nov 2024 1:06 PM GMT
சம்பள உயர்வு கோரிக்கை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது
நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையத்தில் தனியார் காகித ஆலை செயல்பட்டு வருகிறது . இந்த ஆலையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் காகிதங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நிரந்தர தொழிலாளர்களாக பணியாற்றும் சுமார் 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முறையான சம்பளம் உயர்வு வழங்கப்படவில்லை என கூறி சனிக்கிழமை அன்று காகித ஆலை வளாகப் பகுதியில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர். சேசாயி காகித ஆலை தொ.மு.ச. கூட்டு சங்கங்களின் சார்பாக நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு கூட்டு சங்கத் தலைவர் ஏ.எஸ்.சுப்பிரமணியம், துணைத்தலைவர் வெங்கடேஷ் மற்றும் அனைத்து கூட்டு சங்க நிர்வாகிகள் தலைமை தாங்கினர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு துவங்கி 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது குறித்தான ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், தற்போது டிசம்பர் மாதம் துவங்க உள்ள நிலையில், இப்போது வரையிலும் சம்பள உயர்வு குறித்து பேச்சு வார்த்தையை ஆலை நிர்வாகம் மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருகிறது . எனவே கடந்த கால ஒப்பந்தங்களைப் போல காலதாமதம் ஏற்படுத்தி தொழிலாளர்களை அலைகளைக்கும் தனியார் காகித ஆலை நிர்வாகத்தை கண்டித்து நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.. இதில் தொமுச, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்...
Next Story